கொரோனா தொற்று உறுதியானவர்களுக்கான விசேட அறிவிப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படாவிட்டால் இதுகுறித்து அறிவிப்பதற்கு விசேட இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, 1906 என்ற அவசர இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்த முடியும்.

அத்தடன், 0112 860 002 அல்லது 0112 860 003 என்ற இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்குமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று உறுதியானவர்களுக்கு உடனடியான மருத்துவ சிகிச்சையை மேற்கொள்வதற்கு வசதியாக இந்த தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Previous articleகொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் அதிகரிப்பு – படுக்கைகளுக்குப் பற்றாக்குறை
Next articleகாட்டுப் பகுதிகளில் இருந்து இருவரின் சடலம் மீட்பு!