காட்டுப் பகுதிகளில் இருந்து இருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு, வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் ஆகிய இரு பிரதேசங்களில் நேற்றும் (02), இன்றும் (03) இரு ஆண்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபுலானந்தாபுரம், ஏறாவூரைச் சேர்ந்த 57 வயதுடைய இராமலிங்கம் பாக்கியராசா என்பவர் சம்பவதினமான நேற்று (02) வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் விநாயகபுரம் காட்டுப்பகுதியில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

அதேவேளை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள முறுத்தானை கிராமத்தைச் சேர்ந்த 39 வயதுடைய இயைளதம்பி அன்பழகள் என்வர் நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இன்று (03) காலை அவரது வீட்டின் பின்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த இரு வெவ்வேறு சம்பவங்களில் சடலமாக மீட்கப்பட்ட இரு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleகொரோனா தொற்று உறுதியானவர்களுக்கான விசேட அறிவிப்பு!
Next articleயாழ் ,உற்பட வடக்கில் எழுமாற்று பரிசோதனையில் பலருக்கு தொற்று – சுகாதார பணிப்பாளர் தகவல்