யாழ் ,உற்பட வடக்கில் எழுமாற்று பரிசோதனையில் பலருக்கு தொற்று – சுகாதார பணிப்பாளர் தகவல்

யாழ்.மாவட்டத்தில் 9 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் தொற்றுக்குள்ளானவர்கள் குறித்த விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டிருக்கின்றார்.

இதன்படி யாழ்.கொடிகாமம் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 4 வர்த்தகர்களுக்கும், பிரதேசசபை உறுப்பினர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அதேபோல் நல்லுார் சுகதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் இருவர் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் எனவும் மற்றொருவர் யாழ்.பல்கலைகழக விஞ்ஞான பீட மாணவர் எனவும் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நிதி நிறுவன ஊழியர் ஒருவருக்குமாக மாவட்டத்தில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் முல்லைத்தீவு – மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் உத்தியோகத்தர் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பில் கண்டி சென்று திரும்பிய ஆசிரியர் ஒருவருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா பூவரசங்குளம் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் கண்காணிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. என்றும் பணிப்பாளர் கூறியுள்ளார்.

Previous articleகாட்டுப் பகுதிகளில் இருந்து இருவரின் சடலம் மீட்பு!
Next articleகிளிநொச்சியில் போலி நாணய தாள்களை வைத்திருந்தவர் கைது!