கிளிநொச்சியில் போலி நாணய தாள்களை வைத்திருந்தவர் கைது!

கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமானமுறையில் பையில் பணம் எடுத்துவரப்படுகின்றமை தொர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுமார் 8 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1000 ரூபாய் நாணய தாள்கள் மீட்கப்பட்டிருக்கின்றது.

பொலிஸ் விசேட பிரிவினர் குறித்த சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டு போலி நாணய தாள்களை மீட்டிருக்கின்றனர். மேலும் பணத்தை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது. சந

சந்தேகத்திற்கிடமான முறையில் பையில் பணம் எடுத்து செல்லப்படுகின்றமை தொடர்பில் பொலிஸ் விசேட பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து பொலிஸ் விசேட பிரிவினரால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபரை பொலிசார் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது குறித்த பையில் எட்டு லட்சத்து பத்தாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் காணப்பட்டுள்ளது. அதனை மீட்ட பொலிஸார் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர் கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியைச்சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை எனவும்,

சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர். இதேவேளை, குறித்த போலி நாணயத்தாள்களின் பெறுமதி தொடர்பில் கணக்கிடப்பட்டு வருவதாகவும் பொலிசார் குறிப்பிடுகின்றனர்.

Previous articleயாழ் ,உற்பட வடக்கில் எழுமாற்று பரிசோதனையில் பலருக்கு தொற்று – சுகாதார பணிப்பாளர் தகவல்
Next articleநேற்றயதினம் 13 மரணங்கள் 1923 தொற்றுக்கள் – கொரொனா சுழலில் சிக்கி தவிக்கும் இலங்கை