நேற்றயதினம் 13 மரணங்கள் 1923 தொற்றுக்கள் – கொரொனா சுழலில் சிக்கி தவிக்கும் இலங்கை

நேற்றைய தினம் 13 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை 709 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை இதுவைர 1923 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 113 676 ஆக உயர்வடைந்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 98 209 பேர் குணமடைந்துள்ளதோடு , 13 894 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Previous articleகிளிநொச்சியில் போலி நாணய தாள்களை வைத்திருந்தவர் கைது!
Next articleவவுனியாவின் இருவேறு இடங்களில் போலீசார் எனக்கூறி 30 பவுண் நகை கொள்ளை!