வவுனியாவின் இருவேறு இடங்களில் போலீசார் எனக்கூறி 30 பவுண் நகை கொள்ளை!

வவுனியாவின் இருவேறு பகுதிகளில் பொலிசார் என தெரிவித்து 30 பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளது .

இன்றையதினம், வவுனியாநகர் மற்றும் தேக்கவத்தை பகுதிகளில் உள்ள வீடுகளிற்கு சென்ற இனம் தெரியாத நபர்கள் தங்களை பொலிசார் என கூறியுள்ளனர்.

பின்னர் வீட்டில் சோதனை செய்வது போல பாசாங்கு செய்துவிட்டு இரு வீடுகளில் இருந்தும் 30 பவுண் தங்க ஆபரணங்களை களவாடிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

Advertisement

இது தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.