சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினையிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு யாழில் அஞ்சலி!

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினையிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழில் நடைபெற்றது.

இந்நிகழ்வு, யாழ். ஊடக அமையத்தில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் இடம்பெற்றது.

இதன்போது, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மௌன அஞ்சலியுடன் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisement

இதேவேளை, கொரோனோ வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களும் நினைவுகூரப்பட்டதுடன் கொரோனா பெரும் தொற்றலிருந்து மக்கள் மீண்டுவரப் பிரார்த்திக்கப்பட்டது.