நடிகை அம்மு அபிராமிக்கு கொரோனா தொற்று உறுதி!

இயக்குநர் எச்.வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிகர் கார்த்தியின் அன்புத் தங்கையாக நடித்தவர் அம்மு அபிராமி. இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிறகு, அசுரன் படத்தில் நடித்துமிகவும் பிரபலமான அம்மு அபிராமி, அடுத்ததாக மெடிக்கல் கிரைம் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் பெயர் ‘பேட்டரி’.

குடும்பப்பாங்கினியாகவும், நம்ம வீட்டு பொண்ணாகவும் நடித்துவரும் இவரின் மீது இளைஞர்களுக்கு ஒரு கண்ணு. இந்த நிலையில் நிறையப் பேரை காவு வாங்கி வரும் கொரோனா வைரஸ் இவரையும் விட்டுவைக்கவில்லை. ஆம், இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் தற்போது தனிமையில் இருப்பதாகவும், இதிலிருந்து மீண்டு வருவேன் என குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் இவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement