யாழ் பருத்தித்துறையில் சிக்கிய கஞ்சா : படகில் வந்தவர்கள் தப்பியோட்டம்

யாழ்.ப்பாணம், வடமராட்சி, பருத்தித்துறை – சுப்பர்மடம் கடற்பரப்பில் இன்று அதிகாலை 91 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. குறித்த கஞ்சா பருத்தித்துறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் ‘ரோசா’ ரக மினிபஸ் மற்றும் சாரதியும் கைது செய்யப்பட்ட நிலையில் படகில் வந்தவர்கள் தப்பியோடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு கடலில் இவ்வாறான சட்டவிரோத கடல் நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதால் இந்தியாவில் உள்ளவர்கள் மூலம் யாழ். குடாநாட்டிற்குள்ளும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement