நாட்டில் கடந்த ஒரு வார காலத்தில் 11,000 பேருக்கு கொரோனா – 54 பேர் பலி

கடந்த ஒரு வார காலத்தில் 11,000 கொரோனா தொற்றாளர்கள் (கொவிட் 19 வைரஸ்) இனங்காணப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 27 ஆம் திகதி முதல் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 1,923 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் நாளொன்றுக்கு பதிவான அதிகபட்ச கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை இதுவாகும்.

அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 113,678 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களுள் 14,771 தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 709 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவர்களுள் 449 பேர் ஆண்கள் என்பதுடன் 260 பேர் பெண்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களுள் 70 சதவீதமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleயாழ் பருத்தித்துறையில் சிக்கிய கஞ்சா : படகில் வந்தவர்கள் தப்பியோட்டம்
Next articleதமிழகத்திலிருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைந்த பெண்ணும், இரு குழந்தைகளும் கைது!