தமிழகத்திலிருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைந்த பெண்ணும், இரு குழந்தைகளும் கைது!

தமிழகம் – சென்னையிலிருந்து கடந்த 30ம் திகதி சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்ணும், இரு பிள்ளைகளும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

கடந்த 20ம் திகதி தமிழகம் சென்னையிலிருந்து படகு மூலம் இவர்கள் புத்தளம் பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர் புத்தளம், வேப்பமடு பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில்

பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் குறித்த மூவரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருந்த நிலையில் பீ.சி.ஆர் பரிசோதனைகளின் பின்னர் நேற்று காலை குறித்த பெண்ணும்,

4 வயது மற்றும் 13 வயதுடைய இரு பிள்ளைகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

Previous articleநாட்டில் கடந்த ஒரு வார காலத்தில் 11,000 பேருக்கு கொரோனா – 54 பேர் பலி
Next articleநாடு தழுவிய ரீதியில் முடக்கப்படும் சாத்தியம்? நாளை முடிவு எடுக்கப்படும்