யாழ் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 21 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி!

யாழ்.போதனா வைத்தியசாலை, யாழ்.பல்கலைக்கழக ஆய்கூடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 21 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்டவர்களில் வரணி, எழுதுமட்டுவாழ், கொடிகாமம், உசன், மிருசுவில், இத்தாவில், கச்சாய், நாவற்காடு, மீசாலை, பாலாவி உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இவர்களில் அதிக எண்ணிக்கையானவர்கள் கொடிகாமம் சந்தைத் தொகுதி வியாபாரிகள் என்பதால் கொடிகாமம் சந்தைத் தொகுதி தொடர்ந்தும் மூடப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Previous articleமட்டகக்ளப்பில் கலைப்பிரிவில் முதலிடம் பெற்ற திவிஷா கிருபானந்தன்!
Next articleநுவரெலியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 104 பேருக்கு கொரோனா!