பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்து!

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் லாகூரில் இருந்து கைபர் பகதுன்வா மாகாணத்தில் உள்ள மர்தான் என்ற இடத்திற்கு வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென விபத்திற்குள்ளாகி பள்ளத்தாக்கில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் 15 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 35 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் ஒன்றுடன் மோதுவதை தவிர்க்க சாரதி முயற்சி செய்தபோதே பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

Previous articleஇந்தியாவில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சிங்கங்களுக்கு கொரோனா!
Next articleதமிழ் பெண்களை இலக்கு வைத்து விசமத்தனமான செய்யும் விசமிகள்!