தமிழ் பெண்களை இலக்கு வைத்து விசமத்தனமான செய்யும் விசமிகள்!

திருகோணமலையில் பல தமிழ் பெண்களிடம் ஒரே மாதிரியான முறைப்பாடு ஒரே நேரத்தில் சங்கிலி போன்று நான் அவன் இல்லை படத்தை மிஞ்சியது போன்று வெவ்வேறு பெயர்களில் ஒரே போன்நம்பர்களிலும் வாட் சப் மெசச்களை பகிர்ந்து பெண்களுக்கு ஆபாச தகவலை பகிர்ந்து இறுதியில் அப்பெண்கள் இவர்களுடன் வலுக்கட்டாயமாக பகிர்ந்தது போன்று சோடித்து பணயம் வைத்து அப்பெண்களை இழிவுபடுத்துதல் அல்லது தமது ஆபாச வலைக்குள் சிக்க வைக்கும் முயற்சிகள் கிடைத்துள்ளது.

திருகோணமலையில் கடந்த 3 வருடங்களாக வாட்சப் மர்மக் குழுவொன்று, பெண்களை குறிவைத்து, மிக அவதானமாக திட்டமிட்டு செயற்படுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதன் பிண்ணணியில் திருமலை பிரபல தொலைத்தொடர்பு வாடிக்கையாளர் சேவையான டயலொக் நிறுவனமும் தொடர்பா அல்லது அவர்களின் முகவர்கள் ஊழியர்கள் இந்த சேவையை துஸ்பிரயோகம்படுத்துகின்றார்களா எனும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது..

குறித்த வாட்சப் மர்ம நம்பரானது, அவர்களால் தெரிவு செய்யபடுக்கின்ற பெண்களுக்கு தெரிந்த நண்பர்களை போல உரையாடலை மேற்கொண்டு, அதிலிருந்து ஆபாச உரையாடல், புகைப்படங்களை அனுப்பியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ஒவ்வொரு பெண்ணுடனும் அவர்களுடைய நண்பியை போல சாமர்த்தியமாக கதைத்து, முடிந்தளவில் வேறு சில பெண்களின் தொலைபேசி இலக்கங்களையும் பெற்று ஏராளமான தில்லாங்கடி வேலைகளை செய்துள்ளனர்.

அதேவேளை குறித்த மர்மநபர், வாட்சப்பில் மெசேஜ் மூலம் மட்டுமே உரையாடியுள்ளதாகவும், ஒருவரிடம் கூட தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தவில்லை எனவும், சாதாரண நம்பரை துண்டித்துவிட்டு ஒன்லைனில் வாட்சப், வைபரில் தமது புத்திசாலி தனத்தை பயன்படுத்தியுள்ளனர்.

அதுமட்டுமின்றி இதற்கு டயலொக் நிறுவனம் துணையா? என பாதிக்கப்பட்ட பெண்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

காரணம், குறித்த மர்ம தொலைபேசி இலக்கங்கள் அத்தனையும் டயலொக் இலக்கங்களாகவே காணப்பட்டுள்ளன.

சில நிறுவனங்களில் தமது வியாபார சேவையை விஸ்தரிப்பதற்காக ‘ஒன்றுக்கு ஒன்று இலவசம்’ என்ற கொள்கையின் அடிப்படையில் பல சிம் அட்டைகளை எவ்வித அடையாள அட்டை பதிவுமின்றி தூக்கி கொடுத்துள்ளனர்.

இதன் மூலமே சமூகத்தில் பல சீர்கேடுகளும், குற்றங்களும் இலகுவாக முன்னெடுக்கப்படுகின்றன.

அவ்வாறே குறித்த மர்ம தொலைபேசி இலக்கங்கள் அத்தனையும் டயலொக் தொலைபேசி இலக்கங்களாக காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டயலொக் நிறுவனத்திலும் ஒரு அடையாள அட்டை மூலம் பெறப்படும் சிம் ஒன்றுக்கு இன்னொரு சிம் அட்டை ஒன்றை இலவசமாக கொடுத்ததாக வாங்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு வீதிகளில் மட்டுமின்றி, நிறுவங்களிலும் சிம் அட்டைகளை எவ்வித அடையாள அட்டை பதிவுமின்றி வழங்கப்படுவதை முற்றாக தடைசெய்ய வேண்டும்.

அதேவேளை, குறித்த வாட்சப் மர்மக்குழு தொடர்பில் திருகோணமலை டயலொக் நிறுவனத்திற்கு கூறப்பட்ட போதிலும் அவர்கள் அசட்டையாக பதிலளித்து அனுப்பியுள்ளனர்.

குறித்த மர்மநபர்/ குழு, தமிழ் பெண்களை மட்டுமின்றி, பல்கலைக்கழக பெண் பிள்ளைகளிடமும் தமது வேலையை காட்டியுள்ளனர்.

இதுபோன்ற பல குற்றங்கள் சமூகவலைத்தளங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றமை கண்டிக்கத்தக்க விடயமே.

எனவே, குறித்த இலக்கங்கள் உங்கள் தொடர்பில் இருந்தாலோ, தெரிந்தவர்களின் தொடர்பில் பிரச்சனையாக இருக்கும்பட்சத்தில், உடனடியாக பொலிஸ் அதிகாரிகளை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

இலவசமாக கொடுக்கப்படுகின்ற சிம் அட்டைகளை தடை செய்து, தற்போது தமிழ் பெண்களை குறிவைத்து இயங்கி வருகின்ற டயலொக் இலக்கங்கள் மீதும், விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் பாதிக்கப்பட்ட பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட பெண்களில் சிலர் தமது தொலைபேசி இலக்கங்களை மாற்றியபோதும், அவர்களின் பெயரை பயன்படுத்தி வேறு பெண்களுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளமையும், தனது பாடசாலையின் படித்த நண்பியேன நம்பி பழகிய பெண்ணொருவரும் இவ்வாறு ஏமார்ந்து ஒருவருடமாக பித்துபிடித்து அலைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முகநூலில் தமது புகைப்படங்கள் மட்டுமின்றி தமது சொந்த விடயங்கள் அத்தனையும் பகிர்வதை சிலர் பெருமையாக கொண்டுள்ளனர்.பெண்கள் மத்தியில் இதுவும் கடுமையாக கண்டிக்கத்தக்க விடயமே…!

கீழுள்ள தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் தகவல் கிடைத்தால் உடனே அவதானமாக இருக்கவும்….

0760747962
0776874578
0764874167
முகநூல் பதிவு….

Previous articleபேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்து!
Next articleவடக்கின் இன்றய புதிய தொற்றாளர்களின் விபரம் வெளியாகியது!