யாழ்ப்பாணத்தின் பரிசோதனைக் கூட்டங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 44 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் யாழ்.மாவட்டத்தில் 38 பேர், வவுனியா, கிளிநொச்சியில் தலா 3 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 21 பேர் (கொடிகாமம் சந்தைத் தொகுதி வியாபாரிகள் உட்பட்டவர்கள்) யாழ். சிறைச்சாலையில் 08 பேர், யாழ்.போதனா வைத்தியசாலையில் 06 பேர் (தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்) உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவர்
வவுனியா வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், பூவசரங்குளம் வைத்தியசாலையில் இருவர் (வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வந்தவர்கள்)
கிளிநொச்சி கிளிநொச்சி வைத்தியசாலையில் இருவர் (வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வந்தவர் ஒருவர், தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் இருவர்)
உட்பட்டவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.