இந்த இரண்டு பொருளை கொண்டு மருவை நீக்கலாம்! எப்படி தெரியுமா?

உடலில் ஏற்படும் மருக்கள் சில சமயம் நம் அழகிற்கு தடையாக இருக்கும், அழகுக்கு மட்டுமல்ல நம் ஆரோக்கியத்திற்கும் தடையானது.

உடலில் நீண்ட காலம் தேங்கியுள்ள அழுக்குகள் ஓரிடத்தில் ஒன்று சேர்ந்து உருவாவதே மரு என்றொரு நம்பிக்கை நிலவி வருகிறது.

இத்தகைய வகையில் நமது அழகை குறைத்து காட்டும் மருவை நீக்க பலவித மருத்துவங்கள் உதவுகின்றன.

அதில் பல முறைகள் வலியோடு மருவை நீக்கும் முறைகளாகவே இருக்கின்றன என்பதுதான் உண்மை. மின்சாரம் மூலம் மரு நீக்குதல், நூலில் கட்டி மரு நீக்குதல் போன்ற சிகிச்சைகள் வலி மிக்கவை.

ஆனால் வீட்டில் உள்ள இரண்டே இரண்டு பொருட்களை வைத்து மருவை வலியின்றி எளிதாக அகற்ற முடியும் என்றால் சந்தோஷம்தான் இல்லையா.

ஒரு பெரிய வெங்காயத்தினை எடுத்து நன்கு அரைத்து அதன் சாற்றை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும், இந்த சாற்றினை மரு உள்ள இடத்தில் காது குடையும் பட்ஸ் அல்லது பஞ்சில் தொட்டு மரு உள்ள பகுதிகளில் வைக்கவும், இப்படி தொடர்ந்து செய்து வந்தால் வெகு விரைவில் பலன் கிடைக்கும்.

10 அல்லது 20 பூண்டினை எடுத்து நன்கு தட்டி கசக்கி விழுது பதத்தில் வைத்து கொள்ளவும், இந்த விழுதினை மரு உள்ள இடத்தில அடிக்கடி வைத்து சிறிது நேரம் கழித்து கழுவி வர வெகு சீக்கிரமே மருக்கள் இருந்த இடம் தெரியாமல் உதிர்ந்து விடும்.

இந்த இரண்டு பொருட்களையும் வைத்து வீட்டில் இருந்த படியே மருக்களை நீக்க முயற்சி செய்யுங்கள். அதன் மூலம் அழகு மற்றும் ஆரோக்கியம் பெறுங்கள்.

Previous articleவடக்கின் இன்றய புதிய தொற்றாளர்களின் விபரம் வெளியாகியது!
Next articleஅமெரிக்காவில் வாக்கிங் சென்ற இளம்பெண்ணை கடித்து குதறிய கரடிகள்!