மெக்ஸிகோவின் மெட்ரோ ரயில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் பலி ; 70 பேர் காயம்

மெக்ஸிகோவின் தலைநகரில் உள்ள மெட்ரோ ரயில் பாலம் ஒன்று இடிந்து விழ்ந்தில் அதில் பயணித்த ரயில் கோர விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ரயில் இரண்டாக பிளவடைந்ததில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 70 பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் செவ்வாயன்று மெக்ஸிகோ நகரின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டெசான்கோ மற்றும் ஒலிவோஸ் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் செவ்வாயன்று உள்ளூர் நேரப்படி இரவு 10.30 மணிக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் , விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மெக்ஸிகோ நகர அரசாங்கத்தின் செயலாளர் அல்போன்சோ சுரேஸ் டெல் ரியல் (José Alfonso Suárez del Real) மிலெனியோ தொலைக்காட்சிக்கு வழங்கிய உரையில் தெரிவித்துள்ளார்.

Previous articleசுவிஸ் சூரிச் மண்டலத்தில் பரபரப்பு; அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்!
Next articleஉயிரியல் பிரிவில் யாழ். மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி!