வவுனியாவில் விபத்து இருவர் படுகாயம்!

வவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மாலை வவுனியா நகரிலிருந்து ஈச்சங்குளம் பகுதிநோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் ஈச்சங்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அவர்களது மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்கள் நீண்டநேரமாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படாமல் வீதியில் கிடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து சில மணிநேரங்கள் தடைப்பட்டிருந்தது.

விபத்து தொடர்பாக அவசர அம்பியூலன்ஸ் சேவைக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியுள்ளனர். எனினும் நீண்டநேரமாக அம்பியூலன்ஸ் வராத நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டு முச்சக்கரவண்டியூடாக குறித்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Previous articleஉயிரியல் பிரிவில் யாழ். மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி!
Next articleஇலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 700ஐ கடந்தது!