கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்ற நிலையில் , மரணங்களின் எண்ணிக்கையும் 700 ஐ கடந்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 709 பேர் அதிகரித்துள்ளது.
தற்போது பரவும் வைரஸ் வீரியம் மிக்கது என்பதால் மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று சுகாதார தரப்புக்கள் எச்சரித்துள்ளன.
அதற்கமைய நேற்று ஒரே நாளில் 13 மரணங்கள் பதிவாகியிருந்தன. புத்தாண்டின் பின்னர் அதாவது ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு பின்னர் ஆரம்பமான புதிய கொத்தணியில் 10 நாட்களுக்குள் 16 000 இற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதே வேளை சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 13 000 ஐ கடந்துள்ளது.
மேலும் ஆரம்பத்தில் மேல் மாகாணத்தில் குறிப்பாக கொழும்கு, கம்பஹா உள்ளிட்ட மாவட்டங்களிலேயே தொற்று பரவல் தீவிரமாகக் காணப்பட்டது.
எனினும் தற்போது மத்திய மாகாணத்திலும் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். அதற்கமைய நுவரெலியா , கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இவ்வாறு அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு , அங்கு பல கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.