கீரை பறிக்க சென்ற தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் பலி!

கன மழை பெய்துக் கொண்டிருந்த போது கீரை பறிக்க சென்ற தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

கட்டான, ஹல்பே, அம்பலயாய பிரதேசத்தில் தாய் ஒருவர் இரண்டு பிள்ளைகளுடன் நேற்று (03) கன மழை பெய்துக் கொண்டிருந்த போது கீரை பறிப்பதற்காக மா ஓயாவிற்கு சென்றுள்ளார்.

இதன்போது, குறித்த மூவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

41 வயதுடைய தாய் மற்றும் அவரது 9 வயது பெண் குழந்தை மற்றும் உறவினர் ஒருவருடைய 8 வயதுடைய ஆண் குழந்தை ஆகியோர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கைவிடப்பட்டிருந்த களிமண் குழி ஒன்றில் இருந்து மீட்கப் பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலங்கள் நீர்க்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

Previous articleமருத்துவத்துறைக்கு தெரிவாகிச் சாதனை படைத்த 3 தமிழ் மாணவர்கள்!
Next articleநாட்டில் மேலும் பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தலுக்கு!