வவுனியாவில் அதிரடியாக முடக்கப்ட்ட பகுதி!

வவுனியாவில் குருக்கள் புதுக்குளம் பகுதி இன்று காலைமுதல் முடக்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புச் செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில், கடந்த வாரமளவில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்ததுடன் அவர்கள், கிராமத்தில் இடம்பெற்ற சில நிகழ்வுகளிலும் கலந்துகொண்டிருந்தனர்.

இதையடுத்து, குறித்த இருவருடனும் தொடர்புகளைப் பேணிய 100 பேருக்கு நேற்றுமுன்தினம் பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளதுடன் கிராமத்தில் தொற்றுநீக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குருக்கள் புதுக்குளம் பகுதி இன்று காலையிலிருந்து முடக்கப்பட்டுள்ளது.

Previous articleயாழில் வெளிநாட்டு மோகத்தால் தாயொருவர் மகளின் வாழ்க்கையை சீரழித்த அவலம்!
Next articleவவுனியா மக்களுக்கு பொலிசார் அவசர அறிவித்தல்!