கொரோனா தொற்றால் ஒரே வீட்டில் வசிக்கும் 3 பேர் பலி – இலங்கையில் சம்பவம்

கொரோனா தொற்றினால் ஒரே லீட்டில் வசிக்கும் 3 பேர் உயிரிழந்தனர்.

மாலபே, கோணவத்தை பகுதியில் வசித்து வந்த இவர்கள் தொற்று உறுதியான பின்னர், ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளனர்.

94, 86 வயது தம்பதியினரும், அவர்களில் வீட்டில் வசித்து வந்த உறவினரான 82 வயதான பெண்ணும் உயிரிழந்துள்ளார்.

கடுவெல நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரும், அவரது மனைவியான ஓய்வுபெற்ற தாதியுமே உயிரிழந்துள்ளனர்.

தம்பதியினரின் மகளின் கணவரின் தாயாரே உயிரிழந்த மற்றைய பெண்மணி.

உயிரிழந்த தம்பதியினரின் மகள், கணவர், பிள்ளைகள் கொரோனா தொற்றிற்குள்ளாகி முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலியான 3 பேரும் கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் 3ஆம் திகதி உயிரிழந்தனர். அவர்களின் சடலங்கள் ஒரே நேரத்தில் முல்லேரியாவில் தகனம் செய்யப்பட்டன.

Previous articleமீண்டும் திறக்கப்படுகின்றது தம்புள்ள பொருளாதார மையம்!
Next articleயாழில் ஆட்டோ சாரதிக்கு மயக்க மருந்து கலந்த குளிர் பானத்தை வழங்கி சங்கிலியை அபகரித்து சென்ற கொள்ளையன்!