இந்திய தேசம் கொரோனா நோயிலிருந்து விடுபட யாழ். நாக விகாரையில் விசேட வழிபாடு!

இந்தியா கொரோனா நோயிலிருந்து விடுபடயாழ். நாக விகாரையில் விசேட பூசை வழிபாடு நடைபெற்றுள்ளது.

சர்வதேச இந்து – பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இன்று இந்த வழிபாடு இடம்பெற்றது.

இதன்போது, ரத்ன சூத்திர பாராயணமும் ஐம்பெரும் கடவுளுக்கு பூசையும் நடைபெற்றுள்ளது.

உலகத்திற்கு தர்மத்தையும் அன்பையும் அகிம்சையையும் போதித்த பாரத தேசம் தற்போது எழுந்துள்ள கொரோனா நெருக்கடியிலிருந்து மீட்சி பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் மற்று்ம மக்கள் சார்பான இந்து மத குருக்கள் தலைமையில் குறித்த பூசை இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில், இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் மற்றும் இந்து பௌத்த மத குருமார் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்

Previous articleஇந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் பிரவேசிப்பவர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்கவும்!
Next articleகைது பயத்தில் பாராளுமன்ற உறுப்பினர்; நடக்கப்போவது என்ன?