குடும்பத் தகராறு காரணமாக தந்தை, தனது மகனை கொலை செய்துள்ளார்.
குறித்த சம்பவம், மொரவக்க, அலபலாதெணிய பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இடம்பெறுள்ளது.
அவரது மகன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இவ்வாறு கொலை செய்யப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
33 வயதுடைய அலபலாதெணிய, நயாதொல பிரதேசத்தை சேர்ந்த நபரே கொலை செய்யப்பட்டவர் ஆவார்.
சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், சந்தேகநபரை கைது செய்ய மொரவக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.