தமிழக்தில் தந்தையை பழிவாங்க ஐந்து வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரன்!

இந்தியாவின் குஜராத்தின் சூரத்தின் ஹசிரா பகுதியில் ஐந்து வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். குறித்த கொலைச் சம்பவம் சிறுமியின் தந்தையை பழிவாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் சுஜித் சாகேத் என்ற 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை குறித்த குற்றத்திற்காக அவர் பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 2019 ல் ஏற்பட்ட ஒரு சிறிய சண்டையை மனதில் வைத்துக் கொண்டு, பழிவாங்குவதற்காக இப்போது இந்தக் குற்றத்தைச் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் கூற்றுப்படி, மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த சாகேத் என்ற தொழிலாளி, ஐந்து வயது சிறுமியை ஏப்ரல் 30 ஆம் தேதி நயமாக பேசி ஒரு அறைக்கு அழைத்துச் சென்று அங்கு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. சிறுமி உதவிக்காக கத்தியபோது, ​​அவன் சிறுமியை ஒரு செங்கல் மூலம் தாக்கி, பின்னர் கழுத்தை நெரித்தான். உடலை அருகிலுள்ள புதர்களில் வீசிய பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

வெளியே சென்ற சிறுமி வீட்டிற்குத் திரும்பாததால், அவரது குடும்ப உறுப்பினர்கள் சிறுமியைத் தேட ஆரம்பித்துள்ளனர். நீண்ட நேரமாகியும் கிடைக்காததால் பின்னர், அவரது குடும்பத்தினர் சிறுமி காணாமல் போனதாக பொலீசில் புகார் அளித்தனர்.

விசாரணையின் போது, ​​பொலீசார் பல உள்ளூர்வாசிகளை விசாரித்தனர். அவர்களில் சிலர் சாகேத் குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகக் கூறினர். இதையடுத்து, சாகேத்தை பொலீசார் தடுத்து வைத்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான விசாரணையில், காவல்துறையினர் உண்மையைக் கண்டறிந்தனர். சிறுமியின் தந்தையுடன் மோதல் ஏற்பட்டதால் அவர் இந்தக் குற்றத்தைச் செய்ததாக ஒப்புக்கொண்டார்.

Previous articleகுடும்பத் தகராறு காரணமாக மகனை அடித்து கொன்ற தந்தை!
Next articleரயில் முன் பாய்ந்து நபரொருவர் தற்கொலை!