தொற்றாளர் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்தால் மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடு

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையில் பாரியளவு அதிகரிப்பு ஏற்படுமாயின் மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாட்டை விதிக்கவேண்டிய நிலைமை ஏற்படும் என சுகாதா சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதுவரையில் நாட்டின் 14 மாவட்டங்களில் 6 காவல்துறை பிரிவுகளும், 98 கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, திருகோணமலை பிரதேச செயலாளருக்கும், மாவட்ட செயலகத்தின் நிர்வாக அதிகாரி ஒருவருக்கும் கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, திருகோணமலை மாவட்ட செயலாளரும் தற்போது சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் பலி!
Next articleதமிழக ஆளுநரிடம் ஆட்சி அமைப்பதற்காக உரிமையை கோரினார் ஸ்டாலின்!