தமிழக ஆளுநரிடம் ஆட்சி அமைப்பதற்காக உரிமையை கோரினார் ஸ்டாலின்!

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஆட்சிமைக்கவுள்ளது.

இந்நிலையில், இன்று (புதன்கிழமை) தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ஆளுநர் மாளிகையில் சந்தித்து ஆட்சி அமைப்பதற்காக உரிமை கோரியுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றதுடன் அதில் தி.மு.க. மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது.

இதையடுத்து, மு.க.ஸ்டாலின் வரும் ஏழாம் திகதி தமிழக முதல்வராகப் பதவியேற்கவுள்ளதுடன் அவரது கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கவுள்ளது.

இந்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்பதற்கு நேற்று நடைபெற்ற கட்சியின் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஒருமனதாக சம்மதிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக ஆளுநரிடம் ஆட்சி அமைப்பதற்காக உரிமையை ஸ்டாலின் கோரியுள்ளார்.

Previous articleதொற்றாளர் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்தால் மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடு
Next articleஇலங்கையில் பதிவான முதலாவது கர்ப்பிணி மரணம்!