கொரோனா பரவலின் மூன்றாம் அலை மிக மோசமாக இந்நாட்டை பாதிக்கக் கூடும் என நகரசபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி தனது அச்சத்தை இன்று (05) வெளியிட்டுள்ளார்.
எல்லாவற்றிற்கும் வெளிநாடுகளையே நம்பி இருக்கும் மூன்றாம் நிலை நாடான இலங்கையால் இந்தியாவைப் போன்றதொரு மோசமான நிலையில் கொரோனா பரவல் ஏற்படுமாக இருந்தால் மிக கடினமான ஒரு நிலைமைக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும் என அச்சமடைகிறேன்.
நோய்ப் பரவல் அதிகரிக்கின்ற போது வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறை, ஒக்சிஜன் தட்டுப்பாடு, மரணங்கள் அதிகரித்தல், மரண ஓலங்கள் அதிகரித்தல் ,இறுதிக் கிரியைகளை செய்வதில் சிக்கல் போன்ற பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய ஏற்படலாம்.
அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்ட பின்னர் நாட்டை முடக்குவதை விட இப்போதே முற்காப்பு நடவடிக்கைகளை தொடர்வதோடு முழு நாட்டையும் முடக்கியேனும் கொரோனா பரவலை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மக்களின் உயிர்களை பாதுகாக்க அரசாங்கம் முன் வரவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.