யாழ்.வைத்தியசாலையில் இளம் பெண்ணிற்கு நேர்ந்த கதி!

யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த வாரம் விபத்து ஒன்றில் கால் பாதிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் ஒருவரிற்கு அவசர பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை தேவைப்படுவதாக அறிய வந்துள்ளது.

ஏற்கனவே திறமையாக செயற்பட்டு வந்த பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் இளஞ்செழியன் பல்லவன் அவர்களை வலுக்கட்டாயமாக துரத்தி விட்டு நிபுணத்துவம் இல்லாத வைத்தியர் ஒருவரை தற்போதய பணிப்பாளர் நியமித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த இரு வாரங்களாக அவர் பணியில் இல்லை என தெரியவருகின்றது.

இதனால் விடுதி இலக்கம் 23ல் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன் காலினை வெட்டி அகற்ற முடிவுகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணரை தொடர்பு கொண்ட போது குறித்த பெண்ணின் காலினை தன்னால் காப்பாற்ற முடியும் என்றும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொள்ளாது தன்னிச்சையான முடிவுகளால் எமது சமூகம் முடமாக மாற்றப்படுவதாக அவர் கவலையோடு தெரிவித்துள்ளார்.

Previous articleநாட்டை முடக்கியேனும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும்
Next articleநேற்றையதினம் ஒரே நாளில் 14 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!