நேற்றையதினம் ஒரே நாளில் 14 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 734 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய இன்றைய தினத்தில் மாத்திரம் 1,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 117,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 922 பேர் இன்று (05) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 100,075 ஆக அதிகரித்துள்ளது.

Previous articleயாழ்.வைத்தியசாலையில் இளம் பெண்ணிற்கு நேர்ந்த கதி!
Next articleஆட்டோ கிராப் பட புகழ் பாடகர் கோமகன் திடீர் மரணம்!