இந்தியாவில் கொரோனா நோயால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள். செய்திகளை வைத்தாலே கொரோனாவால் அதிகம் மரணம் அடைந்தவர்களின் தகவல்கள் தான் அதிகம் வருகின்றன.
அதைப்பார்க்கும் போதே மனம் பதறுகிறது, எப்போது இந்த நோய் குணமாகும் என்கிற பதட்டத்தில் மக்கள் உள்ளனர்.
பிரபலங்களின் நிறைய பேரின் மரண செய்திகள் இன்னும் துக்கத்தில் ஆழ்த்துகிறது.
தற்போது கொரோனாவால் உயிரிழந்த பாடகரின் மரண செய்தி வந்துள்ளது.
அவர் வேறு யாரும் இல்லை ஆட்டோ கிராப் படத்தில் ஒவ்வொரு பூக்களுமே என்கிற பாடல் மூலம் மக்களிடம் அதிகம் பிரபலமான கோமகன் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு பெறும் அதிர்ச்சியையும் துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.