யாழில் கறிச்சட்டிக்குள் விழுந்து உயிரை விட்ட குடும்பஸ்தர்!

யாழ்.பருத்துறையில் வலிப்பு காரணமாக கறிச்சட்டிக்குள் விழந்த குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்திருக்கின்றார்.

குறித்த சம்பவம் பருத்துறை – மந்திகை – சாவகச்சோி வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் அல்வாய் வடக்கை சேர்ந்த இராசையா தீபன்குமார் (வயது41) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் அறிய வருவதாவது, உயிரிழந்த நபர் கடந்த ஞாயிற்றுக் கிழமை சமையல் பணியில் ஈடுபட்டிருந்தார்.

திடீரென வலிப்புவந்ததால் அவர் கொதித்துக் கொண்டிருந்த கறிச் சட்டிக்குள் மயங்கி விழுந்துள்ளார்.

சக பணியாளர்கள் அவரை உடனடியாக மீட்டு மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும், அவர் சிகிச்சை பலனின்றி நேற்றுக் காலை மரணமானார்.இந்த மரணம் தொடர்பான விசாரணைகளை வைத்தியசாலையின்

திடீர் மரண விசாரணை அதிகாரி ச. சிவராசா நடத்தினார்.

Previous articleகொரோனா சடலங்கள் நல்லடக்கம் செய்படும் இடங்கள்!
Next articleயாழ்.சாவகச்சோி பிரதேச செயலக பணிகள் நிறுத்தப்பட்டு ஊழியர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை!