யாழ்.சாவகச்சோி பிரதேச செயலக பணிகள் நிறுத்தப்பட்டு ஊழியர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை!

யாழ்.சாவகச்சோி பிரதேச செயலக ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்றைய தினம் பிரதேச செயலக பணியகள் நிறுத்தப்பட்டு ஊழியர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதேச செயலக திட்டமிடல் பிரிவில் பணியாற்றிய 3 பேருக்கு நேற்றய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார பிரிவினர் உடனடி நடவடிக்கையில் இறங்கி இன்று காலை ஊழியர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பிரதேச செயலகத்தில் தொற்று நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது.

Previous articleயாழில் கறிச்சட்டிக்குள் விழுந்து உயிரை விட்ட குடும்பஸ்தர்!
Next articleஇலங்கையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட தொற்றார்கள்!