இலங்கையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட தொற்றார்கள்!

அனுராதபுர மாவட்டத்தில் கோவிட் தொற்றுக்குள்ளான 100 பேர் வைத்தியசாலைகளில் இடமில்லாமையினால் வீடுகளில் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சுகாதார அமைச்சிற்கு அறிவித்துவிட்டு, முடிந்த அளவிலானோரை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அனுராதபுரம் மாவட்ட இணைப்பாளரான வைத்தியர் அஜந்த ராஜகருணா தெரிவித்துள்ளார்.

இடவசதி இன்மை காரணமாக தற்போது 100க்கு அதிகமான மக்கள் கோவிட் தொற்றுக்குள்ளாகி வீடுகளில் உள்ளதாகவும் அவர்கள் தொடர்பில் தாம் தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் அனுராதபுரத்தில் இரு பகுதிகள் முடக்கப்பட்டு மக்களின் பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous articleயாழ்.சாவகச்சோி பிரதேச செயலக பணிகள் நிறுத்தப்பட்டு ஊழியர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை!
Next articleகொத்மலை பிரதேசம் மறுஅறிவித்தல் வரையில் முடக்கம்!