கொடிகாமத்தில் கிருமித்தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!

யாழ்ப்பாணம் – கொடிகாமத்தில் கிருமித்தொற்று நீக்கும் செயற்பாடு இன்றைய தினம் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, கொடிகாமம் பகுதியில் கடந்த வாரத்தில் அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து கொடிகாமம் நகர்ப்பகுதி, சந்தை கடைத்தொகுதி மற்றும் இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்றைய தினம் இராணுவத்தினரால் குறித்த பகுதிகள் நீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டு கிருமித் தொற்று நீக்கும் மருந்து விசிறும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது.

யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டுதலில் இராணுவத்தின் 52 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியின் நெறிப்படுத்தலில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஇந்தியாவில் ஒரேநாள் பாதிப்பு 4 இலட்சத்தை தாண்டிய கொரோனா தொற்று எண்ணிக்கை!
Next articleபல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை இழந்தவர்களுக்கான வேலைத்திட்டம்!