சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பு?

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பதற்கான அனுமதியை வழங்காவிடில், நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுமென லாப் கேஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யு.கே.எச். வெகபிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் தெரியவருகையில்,

சமையல் எரிவாயு இறக்குமதிக்கு செலவாகும் தொகைக்கு இணையாக சமையல் எரிவாயு விநியோகத்துக்கான செலவு காணப்படுகின்றது.

அத்தோடு இது பாரிய நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. ஆகையால், சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அவற்றை இறக்குமதி செய்வதில் பெரும் நஷ்டத்துக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் கேஸ் நிறுவனங்கள் நஷ்டமடையாமல் கொண்டு செல்வதாயின், 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 421 ரூபா அதிகரிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு நடைபெறாவிடின், நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவும் நிலை ஏற்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous articleபல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை இழந்தவர்களுக்கான வேலைத்திட்டம்!
Next articleமாணவிக்கு ஆபாசப்படம் காட்டி தவறாக நடந்து கொள்ள முயற்சித்த ஆசிரியருக்கு நேர்ந்த கெதி!