மாணவிக்கு ஆபாசப்படம் காட்டி தவறாக நடந்து கொள்ள முயற்சித்த ஆசிரியருக்கு நேர்ந்த கெதி!

இலங்கையில் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்ந்தும் அதிகரித்துள்ளன.

குடும்ப உறவுகளால் மட்டுமின்றி கல்வி கற்பிக்கும் ஆசிரியர் கூட பலவந்தமாக மாணவிகளை துஸ்பிரயோகம் செய்கின்ற அவலநிலையை இக்காலம் காணப்படுகின்றது.

அவ்வாறு, தன்னிடம் கல்வி கற்ற மாணவிக்கு ஆபாச வீடியோ காண்பித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட பாடசாலை ஆசிரியர் ஒருவரை, காலி மேலதிக நீதிவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்..

குறித்த சந்தேகநபர் அந்த பகுதியில் தனியார் வகுப்பை நடத்தி வருவதோடு, அங்கு கல்வி கற்ற மாணவியே துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது,

கடந்த பெப்ரவரி மாதம் வகுப்பில் யாருமில்லாத சமயத்தில் மாணவியை அழைத்து தனது கையடக்க தொலைபேசியில் ஆபாச படம் காண்பித்துள்ளார்.

பரீட்சை வினாத்தாள்களை முன்கூட்டியே வழங்குவதெனில் தனக்கு ஒத்துழைக்க வேண்டுமென குறிப்பிட்டு, ஆபாச படங்களில் காண்பிக்கப்படுவதை போல செயற்பட கூறி, தனது ஆடையை களைந்துள்ளார்.

மாணவி தப்பிச் செல்லும்போது, அவர் பலவந்தமாக பிடித்து துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வெளியில் சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.

பிறிதொரு நாள், மாணவியை சுவருடன் சாய்த்து, கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி, நடந்த சம்பவங்களை வெளியில் சொல்ல கூடாதென மிரட்டியுள்ளார்.

மாணவி சம்பவம் தாயார் பொலிஷ் நிலையத்தில் முறையிட்டதையடுத்து, ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

Previous articleசமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பு?
Next articleஇன்றும் 1305 பேருக்கு கொரோனா!