பாடசாலையில் போதைமருந்துக்கு அடிமையாகி பலியான பாடசாலை மாணவி!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் பாடசாலை மாணவி ஒருவர் போதைமருந்துக்கு பலியான சம்பவம் குடும்பத்தாரை மொத்தமாக உலுக்கியுள்ளது.

12 வயதேயான சிறுமி Ally கடந்த மாதம் 14ம் திகதி போதைமருந்து அதிகமாக எடுத்துக் கொண்டதால் மரணமடைந்துள்ளார்.

கொரோனாவால் ஊரடங்கு கட்டுப்பாடுகள், தனிமை உள்ளிட்ட காரணங்களால் இளம் வயதிலேயே பலர் போதைமருந்து பழக்கத்திற்கு இலக்காகின்றனர்.

இந்த நிலையிலேயே பாடசாலை மாணவி Ally அதிக போதைமருந்து எடுத்துக்கொண்டதால் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

மாணவி Ally போதைமருந்து பயன்படுத்துவது அவரது தாயாரான Adriana Londono-கு தெரிந்திருந்தது. 2019 முதலே தமது மகள் போதைமருந்து பழக்கத்தில் சிக்கியதாக கூறும் அவர், மூன்று முறை அதிக போதைமருந்து பயன்பாட்டில் சிக்கிக்கொண்டதாகவும், உரிய நேரத்தில் மீட்கப்பட்டதால் உயிர் தப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து போதைமருந்து பழக்கத்தில் இருந்து மகளை மீட்டெடுக்க Adriana Londono முயற்சி மேற்கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு வெறும் 12 வயதே என்பதால், ஆலோசகர்களின் வழிகாட்டுதல் மட்டுமே போதும் என பரிந்துரைத்துள்ளனர்.

14 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே புனர்வாழ்வு சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படுவதாக உரிய நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தற்போது தமது மகள் 12 வயதிலேயே போதைமருந்துக்கு பலியானது, தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என Adriana Londono கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

உரிய நேரத்தில் தமது மகளுக்கு உதவி கிடைத்திருந்தால், அவர் தற்போது உயிருடன் இருந்திருப்பார் என்றே Adriana Londono கண் கலங்கியுள்ளார்.

Previous articleயாழில் 20 பேர் உட்பட வடக்கில் இன்று 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
Next articleகொரோனாவால் இறந்த தந்தையின் சிதை நெருப்பில் பாய்ந்த மகள்!