கனடா ரொறன்ரோவில் 12 வயது சிறுமியை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது!

கனடா ரொறன்ரோவில் 12 வயது சிறுமியை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரொறன்ரோவில் தான் இந்த சம்பவம் கடந்த 23ஆம் திகதி மாலை நடந்துள்ளது.

அன்றைய தினம் 12 வயதான சிறுமி ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுமியை அணுகிய மர்ம நபர் அவர் எங்கு தங்கியுள்ளார், வயது என்ன போன்ற தனிப்பட்ட தகவல்கள் குறித்து கேட்டறிந்திருக்கிறார்.

அதன் பின்னர் என்னுடன் வா என அழைத்தபோது வருவதற்கு விருப்பமில்லை என சிறுமி கூறியிருக்கிறார் .

Advertisement

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்து வந்த நிலையில் சிறுமியை கடத்த முயன்றதாக நேற்று 47 வயதாதன ராபர்டோ அர்மாண்டோ (Roberto Armando) என்பவரை கைது செய்துள்ளனர்.

அவரிடம் பொலிஸார் விசாரணை நடந்து வரும் நிலையில் இது தொடர்பில் விரைவில் மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது