வவுனியாவில் பொலிஸார் எனக்கூறி 30 பவுண் தங்க நகை கொள்ளையடித்த மூவர்கைது!

வவுனியாவில் கடந்த வாரம் பொலிஸார் என தெரிவித்து 30 பவுண் நகை கொள்ளை இடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா நகர் மற்றும் தேக்கவத்தை பகுதிகளில் உள்ள வீடுகளிற்கு சென்ற இனம் தெரியாத நபர்கள் தங்களை பொலிஸார் என கூறியுள்ளனர்.

பின்னர் வீட்டில் சோதனை செய்வது போல பாசாங்கு செய்து விட்டு இரு வீடுகளில் இருந்தும் 30 பவுண் தங்க ஆபரணங்களை களவாடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்ற நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதற்கமைய குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரை வவுனியா பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் என்று கூறப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleநாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் நிலை!
Next articleநடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா!