பிரபல நடிகை ஆண்ட்ரியா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி இன்ஸ்டகிராமில் ஆண்ட்ரியா கூறியதாவது: கடந்த வாரம் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. எனக்கு உதவி செய்யும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு நன்றி. இப்போதும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். உடல்நலம் தேறி வருகிறது. சமூகவலைத்தளங்களில் இருந்து சிறிது இடைவேளை.
உடல்நலக்குறைவுடன் உள்ள இச்சமயத்திலும் கொரோனாவுக்கு எதிராக நாடு போராடிக் கொண்டிருக்கும் போதும் என்ன எழுதுவது என்று தெரியவில்லை. என்ன சொல்வதென்று தெரியாத தருணங்களில் எப்போதும் மனத்திலிருந்து பாட ஆரம்பித்துவிடுவேன் என்றார்.
அரண்மனை 3, கா, வட்டம், பிசாசு 2 போன்ற படங்களில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார்.