கொழும்பு மஹரகம நகர சபையில் மோதிக்கொண்ட ஆண் பெண் மக்கள் பிரதிநிதிகள்!

கொழும்பு மஹரகம நகர சபையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற மாதாந்த அமர்வின்போது கைகலப்பொன்று ஏற்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

மஹரகம நகர சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர்களான சாவித்ரி குணசேகர மற்றும் நிஷாந்த விமலசந்திர ஆகியோரிடையே இவ்வாறு கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரசபையின் உறுப்பினர்களுக்கான அறையொன்றில் இடம்பெற்ற வாக்குவாதத்தை, ஆளும் தரப்பின் உறுப்பினரான சாவித்ரி குணசேகர அண்மையில் ஒளிப்பதிவு செய்ததுடன்,அவர் குறித்த காணொளியை சமூகவலைத்தளம் ஒன்றில் பதிவேற்றியிருந்தாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் இன்றைய மாதாந்த அமர்வின்போது, சக உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்த நிலையில், ஆளும் தரப்பு உறுப்பினரான நிஷாந்த விமலசந்திர, இக்காணொளியை பதிவேற்றிய உறுப்பினாின் அருகில்சென்று எதிர்ப்பு தெரிவித்தபோது, அது கைகலப்பாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleநடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா!
Next articleகொரோனாவால் பாதிக்கப்பட்ட இஸ்ரோ ஊழியர்களுக்கு ட்ரோன்கள் மூலம் மருந்து விநியோகம்!