யாழ் பருத்தித்துறை வீதியில் விரட்டி விரட்டி மோட்டார் சைக்கிளை தீ வைத்த கும்பல்!

யாழ். வடமராட்சி பருத்தித்துறை – அல்வாய் பகுதியில் வீதியால் சென்றவர்களை வழிமறித்த கும்பல் அவர்களை விரட்டியடித்து விட்டு மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வடமராட்சி, பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கட்பட்ட அல்வாய் பகுதியில் நேற்று இரவு இடம் பெற்றுள்ளதாக பருத்தித்துறை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த போது அல்வாய் சிறிலங்கா பாடசாலைக்கு அருகாமையில் வைத்து வழிமறித்த கும்பல் மோட்டார்சைக்கிளை பறித்து அதில் வந்தவர்களை விரட்டியடித்துள்ளது.

அதன் பின்னர் அவ்விடத்திலேயே குறித்த மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது.

இச்சம்பவத்தில் தீ வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் முற்றிலுமாக எரிந்து நாதசமாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பருத்தித்துறை பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இரு தரப்பினருக்கும் இடையிலான முன்பகை காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.