கிளிநொச்சியில் காவல்துறையினர் 22 பேருக்கு தொற்று!

கிளிநொச்சியில் கொரோனா தீவிரமாக சமூக்தில் பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுவரும் சூழலில் இன்று காலை வெளியாகிய பொலிஸார் குறித்த பரிசோதனைத் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

கிளிநொச்சி பொலிஸ் நிலையம் மற்றும் அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸாருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று காலை வெளியாகியுள்ளன.

அவற்றின் அடிப்படையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தினைச் சேர்ந்த பொலிஸார் 22 பேருக்கும் அக்கராயன் பொலிஸ் நிலையத்தினைச் சேர்ந்த பொலிஸார் இருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றும் நேற்று முன்தினமும் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு நோய் அறிகுறிகளுடன் வெளிநோயாளர் பிரிவுகளுக்கு சிகிச்சைக்காகச் சென்ற மக்கள் 10 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவங்களின் தொடராகவேனும் மக்கள் இறுக்கமான சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்தால் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Previous articleயாழ் பருத்தித்துறை வீதியில் விரட்டி விரட்டி மோட்டார் சைக்கிளை தீ வைத்த கும்பல்!
Next articleதமிழக முதலமைச்சராக பதவி ஏற்றார் மு.க.ஸ்டாலின்!