தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றார் மு.க.ஸ்டாலின்!

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று(வெள்ளிக்கிழமை) காலை பதவியேற்றுள்ளார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்று வருகின்றனர்.

சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.125 இடங்களிலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சிகள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதையடுத்து சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின், 133 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக் கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால் ஸ்டாலினை ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

இன்று காலை 9 மணி முதல் ஆளுநர் மாளிகையின் திறந்த புல்வெளியில் குறைந்த விருந்தினர்களுடன் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெற்று வருகின்றது.

முதலமைச்சராகப் பதவியேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Previous articleகிளிநொச்சியில் காவல்துறையினர் 22 பேருக்கு தொற்று!
Next articleநாட்டின் சகல பாடசாலைககளும் அணைத்து மறு அறிவிப்பு வரை மூடப்படுகிறது!