வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வாகனேரி பகுதியில் நீர் நிரம்பிய குழியில் விழுந்து 3 வயது பிள்ளை உயிரிழந்துள்ளது.
விக்னேஸ்வரன் லக்சிகா (3) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளது.
இன்று காலை சிறார்கள் வீட்டின் முன் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். சிறிது நேரத்தில், தமது 3 வயது பிள்ளையை காணாத பெற்றோர் தேடுதல் நடத்திய போது, நீர் நிரம்பிய குழிக்குள் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.
கிணறு வெட்டப்பட்டு, பாதுகாப்பு கட்டுக்கள் கட்டப்படாமல் இருந்த நிலையில் குழநதை அதற்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளது.