முல்லைத்தீவு வைத்தியசாலை பெண் ஊழியருக்கு கொரோனா!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோன தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

04.05.21 அன்று மாவட்ட மருத்துவமனையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட எழுமாறான பரிசோதனையின் போதே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பூவரசங்குளம் நட்டாங்கண்டலை சேர்ந்த மாமூலை முள்ளியவளை பகுதியில் வசித்து வந்த 38 வயதுடைய பெண்ணுக்கே கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு 30.04.2021 கொரோன தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு மேலும் பலருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் மாங்குளம் மருத்துவமனை மூடப்பட்டுள்ளது

இதன் தொடர்ச்சியாக மல்லாவி வைத்தியசாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தார்.

இப்போது முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோன தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
.
இதனைவிட வள்ளிபுனம், முத்துஐயன்கட்டு, ஆலங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கொரோன தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களின் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Previous articleபிசிஆர் சோதனையில் ஆசிரியைக்கு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் கைதான பிஎச்ஐக்கு பிணை!
Next articleஇலங்கையில் பல இலட்சம் பேஸ்புக் கணக்குகளை முடக்க அரசு நடவடிக்கை!