புற்றுநோய் தேங்காய் எண்ணெய் – இன்று மலேசியாவிற்கு மீள் ஏற்றுமதி

மீள் ஏற்றுமதிக்காக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட 230 மெட்ரிக்தொன் தேய்காய் எண்ணெய் இன்று வெள்ளிக்கிழமை மலேசியாவிற்கு மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

மேலும் குறித்த எண்ணெய் தொகையை எடுத்துச் செல்வதற்கான கப்பல் இன்று மாலை கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு அபலடொக்ஸின் எனும் விஷ இராசாயனம் உள்ளடங்கிய காரணத்தினால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட105 மெட்ரிக்தொன் தேங்காய் எண்ணெய் இதற்கு முன்னர் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.

எனினும் அதனடிப்படையில் இன்றைய தினம் 12 கொள்கலன் தேங்காய் எண்ணெய் மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Previous articleகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகை உயிரிழப்பு!
Next articleகடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 436 பேர் கைது!