கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 436 பேர் கைது!

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்காக கடந்த 24 மணித்தியாலங்களில் 436 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் தொடர்பாக கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட அதிக எண்ணிக்கையிலான கைதுகள் இது என்று பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மீறும் நபர்களை அடையாளம் காண இன்று முதல் நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த நடவடிக்கை மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.

Previous articleபுற்றுநோய் தேங்காய் எண்ணெய் – இன்று மலேசியாவிற்கு மீள் ஏற்றுமதி
Next articleவாகன விபத்தில் காவு கொள்ளப்பட்ட இரு இளம் உயிர்கள் : மட்டக்களப்பில் சம்பவம்