வாகன விபத்தில் காவு கொள்ளப்பட்ட இரு இளம் உயிர்கள் : மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் மியான்குளம் சந்தியில் இன்று (07) அதிகாலை இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் மியான்குளம் சந்தியில் அதி வேகமாக பயணித்ததில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் இருந்து தெரிய வந்துள்ளது.

இதில் மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்க வீதியில் வசிக்கும் பரமேஸ்வரன் தனுஜன் (வயது 31) மற்றும் தெஹிவலை ஹோட் வீதியில் வசிக்கும் துரைசிங்கம் வினோகா ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

Previous articleகடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 436 பேர் கைது!
Next articleஇலங்கையில் திடீரென கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய கொவிட் 19 வைத்தியசாலை!